காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் 13 பேரை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன்....*

X
விபத்தில் சிக்கி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் 13 பேரை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன்....* பாஜக அரசின் வாக்கு திருட்டு பற்றிய விளக்க மாநில மாநாடு இன்று திருநெல்வேலியில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர் அதனை முன்னிட்டு இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேன் மூலமாகவும், பேருந்து மூலமாகவும்கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கிராமத்தில் இருந்து விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 12 பேர் வேன் மூலமாக நேற்று இரவு விருத்தாச்சலத்தில் இருந்து கிளம்பி உள்ளனர் இந்த வேன் அதிகாலை 5 மணி அளவில் விருதுநகர் அருகே செவரக்கோட்டை கிராமம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது எதிர் பாதமாக விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பயணம் செய்த ஓட்டுனர் உட்பட 13 பேர் காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் சிகிச்சை பெற்று வரும் தொண்டர்களை விருதுநகர் மாநில செயற்குழு உறுப்பினர் வெயிலுமுத்து, நகரத் தலைவர் நாகேந்திரன் தலைமையில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் அவர்கள் காயம் அடைந்தவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார் மேலும் இந்த நிகழ்வின் போது விருத்தாச்சலம் சட்ட மன்ற உறுப்பின் ராதாகிருஷ்ணன், விருதுநகர் நகர்மன்ற உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்
Next Story

