போதையில் கஞ்சா புகைத்த 13 மாணவர்கள் கைது

X
குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் நேற்று ஒரு வீட்டை பூட்டி, கும்பலாக சிலர் கஞ்சா புகைத்துககொ ண்டு இருப்பதாக மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தக்கலை போலீஸ் எஸ்ஐ இமானுவேல் தலைமையில் தனிப்படை போலீசார் அந்த வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மது போதையில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேர் 15 ,18 வயது சிறுவர்கள். 13 பேரும் மாணவர்கள் ஆகும். இந்த கஞ்சா இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களது 14 செல்போன்களும் பர்முதல் செய்யப்பட்டு, வங்கி கணக்குகளும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Next Story

