புதுக்கோட்டை கதுவாரிபட்டியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம்; சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைப்பு!!

புதுக்கோட்டை கதுவாரிபட்டியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம்; சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைப்பு!!
X
புதுக்கோட்டை கதுவாரிபட்டியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று வடவாளம் ஊராட்சி கதுவாரிபட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இதனை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது சிறுமலர் ஞானபிரகாசம், கலியமுத்து, கழக நிர்வாகிகள் மணிமாறன், மாரிமுத்து, அரசு அதிகாரிகள் மற்றும் திமுக கழக உடன்பிறப்புகளும் கலந்துக்கொண்டனர்.

Next Story