ஆரணியில் 13 கோடியே 23 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு.
ஆரணியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூபாய் 1.30 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட சார் கருவூலம் அலுவலக கட்டடம் திறப்பு விழா, ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் சேவூர், எஸ்.வி.நகரம், இரும்பேடு, வெள்ளேரி, மொரப்பந்தாங்கல், மட்டதாரி, நெசல், அரியப்பாடி, வேதாஜிபுரம், வேலப்பாடி, சங்கீதவாடி, விளை ஆகிய கிராமங்களில் அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி மன்ற கட்டிடம், பொது விநியோக கடை, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேநீர் தேக்க தொட்டி, பால் கொள்முதல் நிலையம், ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடங்கள், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு மேநீர் தேக்க தொட்டி, 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேநீர் தேக்க தொட்டி உள்ளிட்ட கட்டடங்களை திங்கள்கிழமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பேசியது, விழாவில் மொத்தம் 5785 பயனாளிகளுக்கு 13 கோடி 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. பல்வேறு ஊராட்சிகளில் அங்கன்வாடி, நியாய விலை கடை, பள்ளிக்கட்டிடங்கள், ஆவின் கொள்முதல் கட்டிடம் என கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ஆரணி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இது இல்லாமல் மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் 5 கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை, 8 கோடி மதிப்பில் உயர் மட்ட மேம்பாலம், 16 கோடி மதிப்பிலான ஆரணி கமண்டல நாகநதியில் உயர் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஒரு கோடியே 83லட்சம் மதிப்பிலான அறிவு சார் மையம் திறக்கப்பட்டுள்ளது இவ்வாறு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பேசினார். இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, ஆரணி எம்.பி எம்.எஸ். தரணிவேந்தன், திட்ட இயக்குநர் இரா.மணி, செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, செய்யார் எம்.எல்ஏ ஜோதி, முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், ஆரணி கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன், ஆரணி வட்டாட்சியர் கௌரி , தொகுதி செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியக்குழு தலைவர்கள் கனிமொழிசுந்தர், பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்டதுணைசெயலாளர் விண்ணமங்கலம் ரவி, ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், மோகன், மாமது, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஊராட்சி தலைவர்கள் ஷர்மிளா தரணி, சுதா சுப்பிரமணி, ராஜேஸ்வரி முரளி, பார்த்திபன்,பழனி குமரவேல், உமாதேவி, ஏழுமலை, எம் துரை, முருகம்மாள், சிவலிங்கம், பிரேம்குமார், தரணி வெங்கட்ராமன், கற்பகம்,சுப்பிரமணி, தனிகாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் ஏவா வேலு பேசியது விழாவில் மொத்தம் 5785 பயனாளிகளுக்கு 13 கோடி 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது பல்வேறு ஊராட்சிகளில் அங்கன்வாடி நியாய விலை கடை பள்ளிக்கட்டுங்கள் ஆவின் கொள்முதல் என இரண்டு கோடி மதிப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது வேற ஆரணி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிலைத்தவர்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் அஞ்சு கோடி மதிப்பில் சிமெண்ட் சாலை எட்டு கோடி மதிப்பில் வேர் மட்டும் மேம்பாலம் 16 கோடி மதிப்பிலான ஆரணி ஆற்றுப்பாலத்தில் வேறு மற்ற மேம்பாலம் ஒரு கோடியே 83லட்சம் மதிப்பிலான அறிவு சார் மையம் இவ்வாறு பல்வேறு வளர்ச்சி கட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது
Next Story




