ஏற்காட்டில் 13 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை

ஏற்காட்டில் 13 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை
X
வீட்டுக்கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
ஏற்காடு அருகே மயிலம்பட்டி கிராமத்தில் தனியார் தோட்டத்தில் குமரமணி (வயது 59) என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் தன்னுடைய பேத்தியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சேலம் சென்றுள்ளார். மீண்டும் இரவு 10 மணி அளவில் ஏற்காடு மயிலம்பட்டி கிராமத்துக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. வீட்டில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் கொள்ளை போய் இருந்தது. இதுதொடர்பாக ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்த் மீனா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கை ரேகை நிபுணர்கள், மோப்பநாய் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. தோட்ட தொழிலாளர்களிடமும் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் ஏற்காடு மலைகிராம பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story