அருப்புக்கோட்டை அருகே ரூபாய் 130 கோடியில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது*

அருப்புக்கோட்டை அருகே ரூபாய் 130 கோடியில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது*
X
அருப்புக்கோட்டை அருகே ரூபாய் 130 கோடியில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது*
அருப்புக்கோட்டை அருகே ரூபாய் 130 கோடியில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருப்புக்கோட்டையில் இருந்து பந்தல்குடி வரை பல இடங்களில் சேதம் அடைந்து கிடந்தது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பான செய்தி தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. தொடர் செய்தி எதிரொலியாக தற்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிக்கும் பணிகள் ரூ 130 கோடியில் துவங்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவியூரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக பந்தல்குடி வரை சாலைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அருப்புக்கோட்டை அருகே வாழ்வாங்கியிலிருந்து பந்தல்குடி வரை சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சாலை நடுவே உள்ள சென்டர் மீடியனை உயர்த்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் தேவைப்படும் இடங்களில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழியாக செல்லும் வாகனங்கள் இருபுறமும் சரியாக செல்லும் வகையில் சாலை நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டு பாதுகாப்பான வகையில் வாகனங்கள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story