தஞ்சை மாவட்டத்தில் எல் அறுவடை பணிகள் தீவிரம் கிலோ ரூ.130க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை மாவட்டத்தில் எல் அறுவடை பணிகள் தீவிரம் கிலோ ரூ.130க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
X
வேளாண்மை
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா அறுவடைக்கு பின்னரும், மானாவாரி பகுதிகளிலும் எள் சாகுபடி செய்யப் படுவது வழக்கம். அதன்படி மாவட்டத்தில் பூதலூர், திருவையாறு தஞ்சாவூர், பாபநாசம், திருவோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டாரங்களில் 3 ஆயிரம் ஏக்கரில் நடப்பு மார்கழி பருவத்தில் எள் சாகுபடி செய்யப்பட்டது. டிசம்பரில் எள் விதைத்தபோது மழைக்காலமாக இருந்ததால், எள் விதைக்க சரியான பருவமாக இருந்தது அதேபோல, ஜவைரியிலும் எள் பயிருக்கு தேவையான பனி பதத்துடன் காணப்பட்டதால், பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்தன. இதையடுத்து கடந்த வாரம் பெய்த மழையைத் தொடர்ந்து, என் அறுவடை மும்முரமாக தொடங்கியுள்ளது. அறுவடை செய்யப்பட்ட எள்ளை, செடியிலிருந்து பிரித்தெடுப்பதற்காக, ஒரு வார காலத்துக்கு பக்குவப்படுத்தி வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது அறுவடை செய்யப்பட்ட எள், வெளிச்சந்தையில் தனியார் வியாபாரிகளிடம் கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு ரூ.110 என இருந்த நிலையில், தற்போது கிலோவுக்கு ரூ.20 கூடுதலாக கிடைத்து வருவதால். விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். "பொதுமக்கள் பலரும் எள்ளை வாங்கி, செக்கில் கொடுத்து நல்லெண்ணெய் ஆட்டிக்கொள்ள முன்வந்திருப்பதால், எள்ளுக்கு நல்ல விலை கிடைத்து எங்களின் வருவாயும் அதிகரித்துள்ளது" என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்
Next Story