நாமக்கல்லில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 130 வது பிறந்தநாள் விழா!

X
Namakkal King 24x7 |23 Jan 2026 10:16 PM ISTசுதந்திரப் போராட்ட வீரர்கள் நலச் சங்கத்தின் தலைவர் க.சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாமக்கல் மாவட்ட சுதந்திர போராட்ட வீரா்களின் வாரிசுகள் நலச்சங்கம் சாா்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 130-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நாமக்கல் கோட்டை பகுதியில் அமைந்துள்ள நேதாஜி சிலைக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் நலச் சங்கத்தின் தலைவர் க.சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடா்ந்து அனைவரும் வீரவணக்கம் செலுத்தினா். பின்னா் அங்கிருந்தோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், சங்க நிா்வாகிகள் பொருளாளர் சதிஷ், இணைச்செயலாளர் கோவிந்தராஜ்,கே.எம்.ஷேக்நவீத், அன்பழகன், பெரியசாமி, ஜெயந்தி, சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story
