திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் 1300 படிக்கட்டுகளிலும் யோகாசனம் செய்தபடி மலை ஏறிய சேலத்தை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமி*
Tiruchengode King 24x7 |24 Jan 2026 6:17 PM ISTஅர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் 3ம்வகுப்பு படிக்கும் ஹனா என்கிறஇஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிறுமி யோகாசனம் செய்தபடி படியேறி சாதனை படைத்தார். மலை அடிவாரம் ஆறுமுகசாமி கோவிலில் இருந்து தொடங்கி மலை உச்சி வரை1300 படிக்கட்டுகளிலும் பல வகையான யோகாசனங்களை செய்தபடி சிறுமி மலையறிய நிகழ்ச்சி வியப்பூட்டியது
சேலம்செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜூபேர் அகமது இவரது மனைவி அதியா பானுஇவர்களது மகள்G. ஹனா இவர் சேலம் ஸ்ரீ வாசவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் சேலம் சிவகுரு யோகாசன சாலையில் ஆசிரியர்முரளி என்பவரிடம் யோகாசனம் பயின்று வருகிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் ஹனா என்கிறஇஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இந்தசிறுமி யோகாசனம் செய்தபடி படியேறி சாதனை படைத்தார். மலை அடிவாரம் ஆறுமுகசாமி கோவிலில் இருந்து தொடங்கி மலை உச்சி வரை1300 படிக்கட்டுகளிலும் ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் வெவ்வேறு வகையான யோகாசனங்களை செய்தபடி சிறுமி மலையறிய நிகழ்ச்சி வியப்பூட்டுவதாக இருந்தது. சேலம் ஸ்ரீ வாசவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வரும் இவர் இந்த சிறுவயதில் விருச்சகசனா, கருடாசனா, பூரண தனுராசனா, சக்கராசனா, நின்ற பாத ஆசனா, வீராசன அர்த்த கோண ஆசனா, அர்த்த சலபாசன, என பல்வேறு ஆசனங்கள் செய்து கொண்டு மலை ஏறினார். அவருடன் அவரது யோகாசன ஆசிரியர் சிவகுரு யோகாசன சாலை யோகா ஆசிரியர் முரளி,பெற்றோர்கள் சேலம் செவ்வாய்பேட்டை மாநகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் சென்றனர். காலை 6.45 மணிக்கு முதல் படிக்கட்டில் தொடங்கியவர் 10.30 மணி 1300 படியை கடந்து தனது சாதனை முயற்சியை நிறைவு செய்தார்.தனது இந்த சாதனை முயற்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுமி ஹனா நான் கடந்த சில வருடங்களாக யோகாசனம் பயின்று வருகிறேன்.முரளி மாஸ்டர் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் பெற்றோரை மதிக்க வேண்டும் என அடிக்கடி அறிவுறுத்துவார் அதன்படி ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என நினைத்து இன்றுஅர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் 1300படிக்கட்டுகளிலும் யோகாசனம் செய்தபடி மலை ஏறி இருக்கிறேன் மேலும் பல முயற்சிகள் செய்து சாதனை படைப்பேன் எனக் கூறினார்.
Next Story



