காவிரியில் வெள்ளம்-மாயனூர் கதவணைக்கு 1,31,746 கன அடி நீர்வரத்து,
காவிரியில் வெள்ளம்-மாயனூர் கதவணைக்கு 1,31,746 கன அடி நீர்வரத்து, கர்நாடக மாநிலத்தில் கொட்டி தீர்த்த கன மழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி உபரி நீர் கடந்த சில நாட்களாக திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணையின் கொள்ளளவான 120 அடியை எட்டி உபரிநீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இன்று மேட்டூர் அணைக்கு அதிகாலை 4 மணி அளவில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 500 கன அடி நீர்வரத்து இருந்தது. இதில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றிலும் பாசன வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டது. அதே சமயம் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு இன்று காலை ஆறு மணி நிலவரப்படி 1,31,746கன அடி நீர் வரத்து இருந்தது. இதில் 1,30,276 கன அடி நீர் காவிரி ஆற்றிலும் நான்கு பாசன வாய்க்கால்களில் 1470 கன அடி நீரும் திறக்கப்பட்டது. இதனால் காவேரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்,ஆற்றில் இறங்கவும், மீன் பிடிக்கவும், புகைப்படம் எடுக்கவும், குளிக்கவும் கூடாது என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story






