திண்டிவனம் பஸ் நிலையம் அருகே ரூ.1.32 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது.

X
திண்டிவனம் கிடங்கல் (1) பகுதியில் உள்ள தரைப்பாலம், பெஞ்சல் புயலின் போது அடியோடு அடித்து செல்லப்பட்டது.தொடர்ந்து அந்தப்பகுதியில் தற்காலிகமாக வாகனங்கள் சென்று வருவதற்காக பாலம் அமைக்கப்பட்டது.இந்நிலையில் நகராட்சி சார்பில், ரூ.1.32 கோடி செலவில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் அகற்றப்பட்டு, உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது.இதற்கிடையில், பாலம் அமைய உள்ள இடத்தின் இரண்டு பக்கமும் இருந்த கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.தொடர்ந்து தற்போது உயர்மட்ட பாலம் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
Next Story

