நாமக்கல்லில் வருகிற செவ்வாய்க்கிழமை காஞ்சி பெரியவரின் 132-வது அவதார தினவிழா!

X
Namakkal King 24x7 |8 Jun 2025 12:53 PM ISTமஹா பெரியவர் விக்ரஹத்திற்கு,48 லிட்டர் பால் அபிஷேகம், மற்றும் 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும்
பால மஹா பெரியவர் கைங்காரியம் சபா சார்பில், நாமக்கல்லில் காஞ்சிப் பெரியவரின், 132வது அவதார தினவிழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன்-10) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள முல்லை மஹாலில் நடைப்பெற உள்ளது. அன்று மாலை 4 மணிக்கு ஆவஹந்தி ஹோமம், ஆயுஷ், அனுஷ நட்சத்திர, நவகிரக மற்றும் மஹாலட்சுமி ஹோமங்கள் நடைப்பெறும். தொடர்ந்து மாலை, 6.30 மணிக்கு மஹா புர்ணாஹூதி, 7.30க்கு மஹா பெரியவர் விக்ரஹத்திற்கு,48 லிட்டர் பால் அபிஷேகம், மற்றும் 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை, பால மஹா பெரியவர் கைங்கர்யம் சபா சார்பாக மனோஜ் மற்றும் அவரது குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
