வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத ரூ.1.32 கோடி மதிப்பிலான வைப்புத் தொகைக்கான வரைவோலைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக, ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் இன்று (28.11.2025) மாவட்ட ஆட்சியர் உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாமில் 303 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி மதிப்பிலான வரைவோலைகளை வழங்கினார்.

இந்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் “நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம்” அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிதி துறைகளின் கிளைகளில் 01.10.2025 முதல் 31.12.2025 வரை தொடர்ச்சியாக நடைபெறுகிறது.இம்முகாமின் முக்கிய நோக்கம், நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி கணக்குகள், நிலுவையில் உள்ள வைப்பு தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்குகள் மற்றும் பிற நிதி சொத்துக்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் உரிமையாளர்கள் அல்லது அவர்களது சட்டப்பூர்வ வாரிசுகள் தங்களது உரிமை கோரப்படாத நிதி சொத்துக்களை மீட்க உதவுவதாகும். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 2,96,337 வங்கி கணக்குகளில் ரூ.61.93 கோடி உரிமை கோரப்படாமல் நிலுவையில் உள்ளது.வங்கிகளில் பத்து ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது கோரப்படாத வைப்பு தொகைகள் இருப்பின், அவை RBI-யின் Depositor Education and Awareness (DEA) நிதிக்கு மாற்றப்படுகின்றன. இதனை பொதுமக்கள் தங்களது வங்கிகளின் இணையதளங்கள் மூலமாகவும் அல்லது RBI-யின் UDGAM இணையதளம் (https://udgam.rbi.org.in) வழியாகவும் அறிந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகள் எந்த நேரத்திலும் இத்தொகைகளை கோரி பெறலாம்.அதன்படி, இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் 303 நபர்களுக்கு ரூ.1,31,63,748/- அளவில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் வைப்புத் தொகைக்கான வரைவோலைகளை உரியவர்களிடம் வழங்கினார்.மேலும், மாவட்ட அவர்கள், பொதுமக்கள் தங்களது அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றுகளுடன் தங்களது உரிமை கோரப்படாத நிதி தொகைகளை மீட்க 31.12.2025 வரை நடைபெறும் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் பாலின சமுத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சார உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.இம்முகாமில் இந்திய ரிசர்வ் வங்கி அலுவலர், திட்ட இயக்குனர்/ இணை இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) க.செல்வராசு உட்பட அனைத்து வங்கிகள், காப்பீட்டு துறை, நிதித்துறை மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story