சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் 135 -வது பிறந்தநாள் விழா

சமூக சமத்துவ நாள் உறுதிமொழி
நாகை மாவட்டம் கீழ்வேளூர் தெற்கு வீதியில், சாதி எனும் ஆயிரமாண்டு அழுக்கினை, அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளரும், சட்ட மாமேதைமான அண்ணல் டாக்டர் அம்பேத்கர் 135 - வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.லியோ தலைமை வகித்தார். விழாவில், அலங்கரிக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் படத்திற்கு, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ஆர்.என்.அமிர்தராஜா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நிர்வாகிகள் அனைவரும் சமூக சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனர்.
Next Story