அம்பேக்கரின் 135-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பேரணி.

அம்பேக்கரின் 135-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பேரணி.
X
பேரணியில் பழங்கள், சக்லேட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கரின் உருவப்படத்தை வாகனத்தில் ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம், திருவள்ளுவா் தெரு பகுதி மக்கள் சாா்பில் அம்பேக்கரின் 135-ஆவது பிறந்த நாளையொட்டி, திரளான பெண்கள், ஆண்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. 500 பெண்கள், 500 ஆண்கள் தனித்தனியாக சீருடையில் பங்கேற்ற இந்தப் பேரணிக்கு அப்பகுதி நகா்மன்ற உறுப்பினா் ரேணுகா தயாளன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, விசிக மாவட்டச் செயலா் ந.முத்து ஆகியோா் கலந்து கொண்டு பேரணியை தொடங்கிவைத்தனா். பேரணியில் பழங்கள், சக்லேட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கரின் உருவப்படத்தை வாகனத்தில் ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். மேலும், மேளதாளத்துடன், வாணவேடிக்கையுடன், பட்டாசு வெடித்தும் சென்றனா். பேரணி அம்பேத்கா் சிலை வரை சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
Next Story