தமிழர் தேசம் கட்சி கரூர் கிழக்கு மாவட்டம் சார்பில் 1350 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 வது சதய விழா முன்னிட்டு தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் கேகே. செல்வகுமார் தலைமையில் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா கள்ளை மாலைமேடு அருகே உள்ள கிழவன் குளத்தில் 1350 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழர் தேசம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் குரு. மணிகண்டன் முன்னிலை வகித்தார். கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அருள்ராஜ் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். இந்நிகழ்வில் தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் பாம்பன், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், விவசாயிகள் மறுவாழ்வு அறக்கட்டளை நிறுவனர் நாகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்
Next Story




