விபத்தில் இறந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.13.51 லட்சம் நிதி

விபத்தில் இறந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.13.51 லட்சம் நிதி
X
நிதியுதவி
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (49),. பட்டுக்கோட்டை, மதுக்கூர் பகுதிக்கு குற்றப் புலனாய்வு தனிப்பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றினர். கடந்த 2024 அக்.19 ஆம் தேதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதால், செந்தில்குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பிறகு, பணியை முடித்து விட்டு, மீண்டும் பட்டுக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது,  லாரி மோதி விபத்தில் செந்தில்குமார் இறந்தார்.  விபத்தில், இறந்த செந்தில்குமார், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர், கடந்த 1997 ஆம் ஆண்டு, காவல் துறையில் முதல்நிலை காவலராக பணியில் சேர்ந்தார். இதையடுத்து, 'காக்கும் கரங்கள்' அமைப்பின் மூலம், செந்தில்குமாருடன் 1997 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த, சக காவலர்கள் ஒன்றிணைந்து, 13.51 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். இத்தொகையை சனிக்கிழமையன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து, இறந்த செந்தில்குமார் மனைவி வனிதா (45), மகள்கள்  ஹரிணி, கீர்த்தனா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார். இதில் செந்தில்குமாருடன் பணியாற்றிய சக காவலர்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story