திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 136 தேர்வு மையங்களில் 13,353 மாணவ மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 136 தேர்வு மையங்களில் 13,353 மாணவ மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறி வாழ்த்துக்களை சொல்லி அனுப்பி வைத்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 136 தேர்வு மையங்களில் 13,353 மாணவ மாணவிகள் இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினர்.* தமிழகம் முழுவதும் இன்று முதல் இந்த மாதம் 25ஆம் தேதி வரை நடக்க உள்ள 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கிய நிலையில்... திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினர். இன்று காலை 9.45 மணிக்கு முழு பரிசோதனைக்கு பின்பு தேர்வு அறைக்குள் மாணவ மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்ட பின்பு 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கவிருக்கும் தமிழ் தேர்வு தொடங்கிய நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள 136 தேர்வு மையங்களில் 7088 மாணவிகள் 6265 மாணவர்கள் என மொத்தம் 13,353 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். முன்னதாக திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளை அமர வைத்து முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி தேர்வு எழுதுவதற்கான அறிவுரைகள் மற்றும் வாழ்த்துக்களை கூறி அனுப்பி வைத்தார்.
Next Story