கும்பகோணத்தில் ரூ.1.37 கோடியில் 3 பூங்காக்கள் திறப்பு

கும்பகோணத்தில் ரூ.1.37 கோடியில் 3 பூங்காக்கள் திறப்பு
X
பூங்கா
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பில் 3 பூங்காக்களை க.அன்பழகன் எம்எல்ஏ வியாழக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். கும்பகோணம் மாநகராட்சி 7-ஆவது வாா்டு திருவள்ளுவா் நகரில் ரூ. 26 லட்சம், 8 - ஆவது வாா்டு பெரியாா் நகரில் ரூ.54 லட்சம், 20-ஆவது வாா்டு கிராண்ட் சிட்டி நகரில் ரூ. 47 லட்சம் என 3 பூங்காக்கள் மொத்தம் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து புனரமைக்கப்பட்டு. பூங்காக்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு க.அன்பழகன் எம்எல்ஏ கொண்டு வந்தாா். இந்நிகழ்வில், மேயா் க.சரவணன், மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப. தமிழழகன், ஆணையா் மு.காந்திராஜ், துணை செயலா் பிரியம் ஜெ.சசிதரன், ஒன்றிய செயலா் ஜெ. சுதாகா், செயற்குழு உறுப்பினா் குட்டி தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story