ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயத்தில் ரூ 1.38 கோடியில் புனரமைப்பு பணி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.

X
அரியலூர், ஜூன்.17- அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயத்தில் பழுது மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள நிதி கோரப்பட்டதை தொடர்ந்து, தேவலாயத்தின் பழுது மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள பரிந்துரைப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையிலான குழுவினர் தல ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, சுற்றுலாத் துறை அமைச்சரால் 2024-25 ஆம் ஆண்டு வரவு செலவு கூட்டத்தொடரில் அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயப் பகுதிகளில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் கழிவறைகள், பேவர் பிளாக் சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், தேவலாயப் பகுதி நுழைவு வாயில், நீர் சுத்திகரிப்பு நிலையம், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயப் பகுதியில் பழுது மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி கோரப்பட்டதை தொடர்ந்து, அடைக்கலமாதா தேவலாயத்தின் பழுது மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பரிந்துரை செய்திடும் பொருட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயத்தில் வளாகம் முழுவதும் பார்வையிட்டு தேவலாயத்தில் மேற்கொள்ள வேண்டிய பழுதுகள் மற்றும் புனரமைக்கும் பணிகளின் விவரம் குறித்தும், அத்தகைய பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான நிதி விவரங்கள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் சுற்றலாத்துறையின் சார்பில் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிக்கான வரைபடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.அதனைத்தொடர்ந்து ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவுத்திட்டம் சமையல் கூடத்தினை பார்வையிட்டு மதிய உணவு வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை, பொருட்களின் இருப்பு உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்து, தொடர்ந்து மாணவர்களுக்கு உணவினை சுகாதாரமான முறையில் தயார் செய்து, போதிய அளவில் வழங்கவேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.94.6 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் நான்கு வகுப்பறை பள்ளி கட்டிட கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு கட்டுமான பொருட்களின் தரம், பணி முடிவடையும் காலம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, ஏலாக்குறிச்சி அரசு பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதியினை பார்வையிட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை விவரம், கழிவறைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததுடன், உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, பார்வையிட்டு மாணவிகளுக்கு தினசரி வழங்கப்படும் உணவுகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாணிக்கராஜ், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாய பாதிரியார் தங்கசாமி, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குருநாதன், பொய்யாமொழி மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

