கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.13.90 லட்சம் வர்த்தகம்

கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.13.90 லட்சம் வர்த்தகம்
X
வர்த்தகம்
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 13.90 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கமிட்டிக்கு, மக்காச்சோளம் 205 மூட்டை; எள் 60; உளுந்து 40; வரகு 8; துவரை; ஆமணக்கு தலா ஒரு மூட்டை என மொத்தம், 315 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,369 ரூபாய்; எள் 12,868 ரூபாய்; உளுந்து 6,964 ரூபாய்; வரகு 2,038 ரூபாய்; துவரை 5,009 ரூபாய் ; ஆமணக்கு 6,809 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 13 லட்சத்து 90 ஆயிரத்து 316 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 5 மூட்டை, எள் ஒரு மூட்டை என மொத்தம் 6 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,386 ரூபாய்; எள் 12,761 ரூபாய்; என மொத்தம், 24 ஆயிரத்து 691க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் நெல் 217 மூட்டை, சோளம் 4, உளுந்து ஒரு மூட்டைஎன மொத்தம் 222 மூட்டை விளைபொருட்கள் விற்னைக்காக கொண்டு வரப்பட்டன.சராசரியாக நெல் 1,995 ரூபாய்; சோளம் 2200 ரூபாய்; உளுந்து 5,800 ரூபாய்; என கொள்முதல் செய்யப்பட்டது. அங்கு மொத்தமாக 4 லட்சத்து 57 ஆயிரத்து 38க்கு வர்த்தகம் நடந்தது.
Next Story