வெளிநாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 13,91,200 ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட 2 நபர்களை கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் வெளிநாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 13,91,200 ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட 2 நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட சைபர் குற்ற காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார் (34) என்பவர் கடந்த 08 வருடங்களாக துபாயில் வீட்டுவேலை செய்து வந்ததாகவும். கடந்த வருடம் மே மாதம் தனது ஊருக்கு விடுமுறையில் வந்த, தனது நண்பர் ஆகாஷ், என்பவர் மூலம் வாட்ஸ்அப் செயலி மூலம் பேசிய கோயம்புத்தூரைச் சேர்ந்த 1.மகிழன் (36) எறையூர் பகுதியைச் சேர்ந்த 2.கவிதா (44) ஆகிய இருவரும் சிங்கப்பூரில் அதிக சம்பளத்தில் வேலை உள்ளதாக கூறியதன் பேரில் அதனை நம்பி மேற்படி, அருண்குமார் என்பவரும் அவரது நண்பர்கள் நிவாஸ் மற்றும் சரவணன் ஆகியோர்களிடம் ரூபாய் 13,91,200 பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தராமல் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த எதிரிகள் இருவரையும் கைது செய்து நேற்று 30.06.2025 -ம் தேதி காவல் ஆய்வாளர் செல்வகுமாரி (மாவட்ட குற்றப்பிரிவு பொறுப்பு சைபர் குற்றப்பிரிவு) மற்றும் உதவி ஆய்வாளர் மனோஜ் ஆகியோர்கள் தலைமையிலான சைபர் குற்ற காவல்நிலைய காவல்துறையினர் மேற்படி எதிரிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story



