பரமத்தி வேலூரில் ரூ.14 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்.
Paramathi Velur King 24x7 |6 Sep 2024 11:26 AM GMT
பரமத்தி வேலூரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.14 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்.
பரமத்திவேலூர், செப்.6- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், பொத்தனூர், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.14 லட்சத்து 60 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது. பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர்இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. தேங்காய் பருப்பை ஏலம் எடுப்பதற்கு வெள்ளக்கோவில், சிவகிரி, அவல் பூந்துறை, முத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 13 ஆயிரத்து 60 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.106.90- க்கும், குறைந்த பட்சமாக ரூ.96.99- க்கும், சராசரியாக ரூ.103.60- க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ரூ.94.99 க்கும், குறைந்த பட்சமாக ரூ.86.99 க்கும், சராசரியாக ரூ. 91.39 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 13 லட்சத்து 80 ஆயிரத்து 695- க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 14 ஆயிரத்து 90 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.103.20- க்கும், குறைந்த பட்சமாக ரூ.95.97 க்கும், சராசரியாக ரூ.101.69-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ரூ. 92.00க்கும், குறைந்த பட்சமாக ரூ. 79.00 க்கும், சராசரியாக ரூ.88.39 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.14 லட்சத்து 60 ஆயிரத்து 890- க்கு வர்த்தகம் நடைபெற்றது.
Next Story