விழுப்புரத்தில் 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் திருடிய நபர் கைது

X

14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் திருடிய நபர் கைது
விழுப்புரம் டவுன் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, ரயில் நிலையம் அருகே ஏராளமான சாவிகளோடு பைக் திருட முயன்ற நபரை கையும், களவுமாக பிடித்தனர். விசாரணையில், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, லாலா குண்டத்தைச் சேர்ந்த உமர் பரூக், 41; என்பதும், பைக்குகளை திருடி விற்று வருவதும், விழுப்புரத்தில் பல இடங்களில் 14 பைக் மற்றும் மொபட்டுகளை திருடி மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.அதன்பேரில், அவர் திருடி வைத்திருந்த 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து உமர் பரூக்கை கைது செய்தனர்.
Next Story