குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா
கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றிய போது கிராமப்புறத்தில் மாணவர்கள் கல்வி கற்று உயர்கல்வி கற்று முன்னேறிச் செல்வது நாட்டிற்கு பெருத்த நன்மையை கொடுக்கும் மாணவர்கள் உயர்கல்வி கற்று வாழ்வில் தங்களுக்கான ஒரு நிலையை அடைந்து விட்டால் பிறகு தங்களின் பெற்றோர் மற்றும் தாங்கள் கல்வி கற்ற நிறுவனம் ஆகியவற்றை போற்றி செயல்பட வேண்டும். பெற்றோரை மதித்து நடந்தால் வாழ்வில் வெற்றி பெற அனைத்து சாத்திய கூறுகளும் அமையும், கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி கற்று மேன்மை அடைவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் துணை புரிவதாக அமையும் உயர்கல்வி நகர்ப்புறம் கிராமப்புறம் என்று அனைவருக்கும் சமமாக கிடைப்பதால் நாடு வளர்ச்சி நிலையை எளிதில் அடைந்து வருகிறது என்று கூறி பட்டம் பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை மன்ற உறுப்பினர் வேணுகோபால், தமிழ் துறை தலைவர் ஜெகதீசன், ஆங்கிலத்துறை தலைவர் ஹில்டாதேன்மொழி, கணிதத்துறை தலைவர் உமாதேவி, வணிகவியல் துறைத் தலைவர் பெரியசாமி, வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் வெங்கடேசன், தாவரவியல் துறை தலைவர் வேணுகோபால், விலங்கியல் துறை தலைவர் பாபுநாத், வேதியல் துறை தலைவர் பாலசுப்பிரமணி, இயற்பியல் துறை தலைவர் ராமநாதன், உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை தலைவர் மகேந்திரன், உடற்கல்வி இயக்குனர் பொறுப்பு பேராசிரியர் வைரமூர்த்தி மற்றும் இளைஞர் மேம்பாட்டு திறன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பத்மப்பிரியா, வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் சரவணன் மற்றும் பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் 680 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இறுதியாக கல்லூரி முதல்வர், பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
Next Story