பரமத்தி வேலூரில் ரூ.14½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்.

X
Paramathi Velur King 24x7 |18 April 2025 6:18 PM ISTபரமத்தி வேலூரில் ரூ.14½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
பரமத்திவேலூர், ஏப்.18: பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை உள் ளது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமையன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். இந்த சந்தைக்கு பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்தும், கரூர் மாவட்டத்தில் இருந்தும் தென்னை விவசாயிகள் ஏரா ளமானவர்கள் தேங்காய் பருப்புகளை ஏலத்திற்கு கொண்டு வருவார்கள். இதனை ஏலம் எடுப்பதற்காக பரமத்திவேலூர், ஈரோடு, வெள்ளக்கோவில், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் பலர் வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு மொத்தம் 9 ஆயிரத்து 450 கிலோ தேங்காய் பருப்புகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.180.69-க்கும், குறைந்தபட்ச மாக ரூ.142.99-க்கும், சராசரி யாக ரூ.179.55-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிகபட்ச மாக ரூ.127.99-க்கும், குறைந்த பட்சமாக ரூ.90.99-க்கும், சராசரியாக ரூ.122.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.14 லட்சத்து 64 ஆயிரத்து 750-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
Next Story
