உப்போடைபகுதியில் 14 ஆம் தேதி சித்திரை பெருவிழா

உப்போடைபகுதியில்  14 ஆம் தேதி  சித்திரை  பெருவிழா
X
பால் குடம் , அக்னி, அக்கினி சட்டி, மாவிளக்கு, சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
பெரம்பலூர் நகர பகுதியில் உப்போ டையில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ நாகமுத்துமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழா பெரம்பலூர் நகரப் பகுதியில் எளம்பலூர் ரோடு உப்போடையில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ நாகமுத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் ஸ்ரீ செல்வகணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முனிஷ்வரன், ஸ்ரீ எல்லை கருப்புசாமி ஆகிய தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா நடைபெறும் இத்திருவிழாவில் சித்திரை மாதம் 12ம் தேதி முகூர்த்த கால் நடுதல், காப்பு கட்டுதல்,சக்தி அழைத்தல், அன்று அம்மன் வீதி உலா வருதல் மற்றும் வானவேடிக்கை அடுத்த நாள் சித்திரை 13ம் தேதி ஸ்ரீ நாகமுத்துமாரியம்மன் ஊஞ்சலில் தாலாட்டுதல், அன்னதானம் அன்று மாலை அம்மனுக்கு பொங்கல் வைத்து மகா தீபாரதனை அதை தொடர்ந்து சித்திரை மாதம் 14ம் தேதி பால்குடம், அக்னி சட்டி, அலவு குத்துதல், மாவிளக்கு பூஜை நடைபெறும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெறுமாறு கோயில் நிர்வாகிகள் மற்றும் உப்போடை கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story