ராணிப்பேட்டையில் 14 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது!

X
ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னதக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 34). அடிதடி, மணல் கடத்தல் உள்பட வழக்குகளில் தொடர்புடைய இவரை 14 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். மாவட்ட துணை எஸ்பி இமயவர்மன் தலைமை யில் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ், போலீஸ்காரர் வினோத் உள்ளிட்டோர் நேற்று செல்வராஜை கைது செய்தனர். பின்னர் வாலாஜா கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவரை போலீசார் கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story

