கரூரில் 14 ஜோடிக்கு இலவச திருமணம் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

கரூரில் 14 ஜோடிக்கு இலவச திருமணம் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
கரூரில் 14 ஜோடிக்கு இலவச திருமணம் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை , எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததன் அடிப்படையில், இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் ஏழை எளிய 14 இணைகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. முன்னதாக மணமக்களுக்கு கங்கணம் கட்டியும், யாகம் வளர்த்தும், மந்திரங்கள் ஓதியும், நாதஸ்வர மேளதாளங்கள் முழங்கி மணமக்கள் ஒரு சேர தாலி கட்டி மாலை மாற்றிக் கொண்டனர். இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.எம்எல்ஏக்கள் இளங்கோ, சிவகாம சுந்தரி, மாமன்ற உறுபினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து புதுமண தம்பதிகளுக்கு தலா ஒரு லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினர். இதில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் புதுமண தம்பதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமண விருந்து வழங்கினர்
Next Story