அரியலூரில் ஜூலை 14 முதல் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

X
அரியலூர்,ஜூலை 14- அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில், குறு வட்ட அளவில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான குடியரசு மற்றும் பாரதியர் தின விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 14 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக அரியலூர் அடுத்த மணக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆலோசனைக் கூட்டத்துக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமை வகித்து, நிகழாண்டு, இப்பள்ளி சார்பில் இந்த குறுவட்ட அளவிலான போட்டிகளை நடத்துவதில் மிகவும் மிகழ்ச்சியடைகிறேன். ஆகவே இப்போட்டிகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கூட்டத்தில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரவி, ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும், குறுவட்ட இணைச் செயலருமான கண்ணன் செய்திருந்தார்.தடகளம், சதுரங்கம், கால்பந்து, கைப்பந்து,கோ.கோ, ஹாக்கி, கபடி,சிலம்பம், கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது. படவிளக்கம்:குறுவட்ட அளவிலான போட்டிகள் நடத்துவது தொடர்பாக அரியலூர் அடுத்த மணக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கலைவாணன்.
Next Story

