நீலகிரி மாவட்டம் குன்னூரில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 -ம் தேதி இன்று குன்னூர் மார்க்கெட் வியாபாரிகளுடன் நகராட்சி ஆணையாளர் இளம் பரிதி கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்......

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உயர்  நீதிமன்ற உத்தரவுப்படி 14 -ம் தேதி இன்று குன்னூர் மார்க்கெட் வியாபாரிகளுடன்  நகராட்சி  ஆணையாளர் இளம் பரிதி கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்......
X
குன்னூர் மார்க்கெட் வியாபாரிகளுடன் நகராட்சி ஆணையாளர் இளம் பரிதி கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்........
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 -ம் தேதி இன்று குன்னூர் மார்க்கெட் வியாபாரிகளுடன் நகராட்சி ஆணையாளர் இளம் பரிதி கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்........ நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை இடித்து கட்டி தரைத்தளத்தில் அதிநவீன பார்க்கிங் வசதியும் அதற்கு மேல் உள்ள இடங்களில் அதிநவீன கடைகள் கட்ட திட்டமிடப்பட்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 41.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. அதற்கான டெண்டரும் விடப்பட்டு நான்கு மாதங்களுக்கு முன்பு பூமி பூஜையும் போடப்பட்டது. நகராட்சியின் இந்த நடவடிக்கையால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும் எனவும், மாற்றுக் கடைகள் நகரப் பகுதியிலேயே கட்டிக் கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி கடையடைப்பு உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் நகராட்சி கடைகளை காலி செய்து தற்காலிக கடைகளுக்கு செல்ல கடந்த மாதம் 13-ம் தேதி 15 நாட்கள் அவகாசம் கொடுத்து நகராட்ச்சி சார்பாக நோட்டிஸ் வழங்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் பத்து பேர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 14-ம் தேதி இன்று வியாபாரிகளை அழைத்து தற்காலிக கடைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது இதன் அறிக்கையை வரும் 21-ம் தேதி நகராட்சி ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார். இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் கருத்து கேட்ட நகராட்சி ஆணையாளர் கட்டாயம் மார்க்கெட் கடைகள் அகற்றப்படும் என்றும் இதுவரை முறையான வாடகை செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Next Story