கோடநாடு கொலை வழக்குஅடுத்த மாதம் 14ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்......
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வாளையார் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி அடுத்த மாதம் 14ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்...... கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வாளையார் மனோஜ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இவ்வழக்கினை விசாரணை செய்து வரும் சி பி சி ஐ டி போலீசார் நீதிமன்றத்திற்கு வருகை புரிந்தனர். அதேப்போல் அரசுதரப்பு மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் கூடுதல் சாட்சிகள் இடையே விசாரணை நடத்த கால அகவசம் கேட்கப்பட்டதால் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இது குறித்து எதிர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்தி வரும் இன்று போல் விசாரணை குறித்து அரசு தரப்பில் நீதிமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை, கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் மேலதிகார விசாரணைக்கான கால தாமதம் குறித்து பொதுமக்கள் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்களுக்கு அரசு தரப்பு மற்றும் விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறினார். பேட்டி - விஜயன் எதிர் தரப்பு வழக்கறிஞர்
Next Story



