கோவை: கஞ்சா கடத்தல் - நான்கு பேருக்கு 14 ஆண்டு சிறை !

கோவை: கஞ்சா கடத்தல் - நான்கு பேருக்கு 14 ஆண்டு சிறை !
X
ஆந்திராவில் இருந்து ஈரோட்டிற்கு 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நான்கு பேருக்கும் கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை விதித்தது.
ஆந்திராவில் இருந்து சோள மூட்டைகளில் மறைத்து ஈரோட்டிற்கு கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா வழக்கில் நான்கு பேருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் நேற்று வழங்கிய தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் லாரி ஓட்டுநர்கள் மீனாட்சி சுந்தரம், தவசி, லாரி உரிமையாளர் பூ பாண்டி, மற்றும் கஞ்சா வாங்க இருந்த சௌந்தர் ஆகிய நான்கு பேருக்கும் தலா 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் மொத்தம் 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story