கடலூர்: தானே புயல் தாக்கி 14 ஆண்டுகள் நிறைவு

X
Kurinjipadi King 24x7 |30 Dec 2025 7:53 PM ISTகடலூர் மாவட்டத்தில் தானே புயல் தாக்கி 14 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
கடந்த 2011 ஆம் ஆண்டு (டிச.30) ஆம் தேதி இதே நாளில் கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கி கோர தாண்டவமாடியது. அப்போது சூறாவளி காற்றால் லட்சக்கணக்கான மா, பலா, வாழை, தென்னை, முந்திரி உள்ளிட்ட மரங்கள், விவசாய பயிர்கள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் ஏராளமான வீடுகள் மற்றும் மீனவர்களின் படகுகள் சேதமடைந்து 14 ஆண்டுகள் ஆன நிலையிலும் மக்கள் மனதில் நீங்காமல் இன்றும் இருந்து வருகிறது.
Next Story
