நாமக்கல் மாவட்டத்தில் 14 பெண் ஆட்டோ டாக்ஸி வாகன ஓட்டுநர்களுக்குரூ.14.00 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் நிறைந்த மனதுடன் நன்றி.

நாமக்கல் மாவட்டத்தில் 14 பெண் ஆட்டோ  டாக்ஸி வாகன ஓட்டுநர்களுக்குரூ.14.00 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு  பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் நிறைந்த மனதுடன் நன்றி.
X
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, நாமக்கல் மாவட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உட்பட 20 வாரியங்களில் சுமார் 93,688 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

மேலும் கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி உதவித் தொகை, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், கட்டுமான பணியிடத்து விபத்து மரணம், குடும்ப ஓய்வூதியம், விபத்து ஊனம், பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ / டாக்சி மானியம், கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி என 1,98,113 பயனாளிகளுக்கு ரூ.215.55 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் வீட்டு வசதித்திட்டத்தில் பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், தொழிலாளர்களுக்கு அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள தலா ரூ.4.00 இலட்சம் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில ரூ.50,000/- வழங்கப்பட்டு வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில், தொழிலாளர் நலத்துறையின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு சொந்தமாக புதிய ஆட்டோ ரிக்சா / டாக்ஸி வாகனம் வாங்க தலா ரூ.1.00 இலட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 13 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாங்குவதற்கும், ஒரு பெண் ஓட்டுநருக்கு டாக்ஸி வாங்குவதற்கும் என 14 பெண் வாகன ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.14.00 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தைச் சேர்ந்த பிரேமா, க/பெ.விஜயன் தெரிவித்ததாவது,எனக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். எனது கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பல்வேறு இடங்களில் தற்காலிகமாக வேலை செய்து எனது குழந்தைகளை வளர்த்து வருகிறேன். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என இணைய தளத்தில் தேடிய பொழுது நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கப்படுவதை தெரிந்து கொண்டேன். எனது தந்தை வாகன ஓட்டுநராக உள்ளார். நானும் ஆட்டோ வாகனம் ஓட்டி வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளேன். தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளேன். தற்பொழுது எனக்கு ஆட்டோ வாங்குவதற்கு மானியமாக ரூ.1.00 வழங்கியுள்ளார்கள். நாளொன்றுக்கு சுமார் ரூ.700/- வரை வருமானம் ஈட்டி வருகிறேன். நமக்கென சொந்த தொழில் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். இன்றைய காலத்தில் அனைத்து பெண்களும் சுயதொழில் செய்து முன்னேற வேண்டும். சமுதாயத்தில் ஏழை, எளிய பெண்கள் தனித்து வாழவும், வாழ்க்கையில் முன்றேவும் இத்தகைய திட்டத்தினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


Next Story