அரக்கோணத்தில் 14 கிலோ கஞ்சா கடத்தல்-2 பேர் கைது!

X
அரக்கோணம் பழனிபேட்டை பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டதில் 14 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த விஜயகாந்த், கேரளாவை சேர்ந்த அஸ்ரப்புதின் ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

