அரியலூரில் 14 ஏரிகளின் 51.2கி.மீ. நீளமுள்ள வரத்து வாய்க்கால்கள் வடிகால் வாய்க்கால்கள் மற்றும் ஓடைகள் தூர்வாரும் பணிகளை தொடக்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்.

X
அரியலூர், ஏப்.10- அரியலூர் மாவட்டத்தில் மருதையாறு வடிநிலக்கோட்டம், அரியலூர் மற்றும் ஆற்று பாதுகாப்புக்கோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள். உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள் முட்புதர்கள் மண்டியும் மண்மேடிட்டு தூர்ந்தும் உள்ளதால் நீர் வெளியேற முடியாமல் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள நீர் பாசன நிலங்களில் தேங்கி விவசாய சாகுபடி பயிர்களுக்கும் மற்றும் நிலங்களுக்கும் சேதம் ஏற்படுத்தி உள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் 14 ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள 51.2 கி.மீ. நீளமுள்ள வரத்து வாய்க்கால்கள், வடிக்கால் வாய்க்கால்கள் மற்றும் ஓடைகள் தூர்வாருதல் என 22 பணிகளை ரூ.26 கோடியே 68 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது இப்பணிகளை ஜூன் மாதம் ஒன்பதாம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அரியலூர் நகராட்சியில் உள்ள அரச நிலையத்தான் ஏரி மற்றும் குறுஞ்சான் குளம் ஏரிகளுக்கான இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால்களை இரண்டு கோடி மதிப்பில் சீரமைக்கும் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள வேண்டும் இதன் கீழ் அருங்கால், கல்லக்குடி, அரியலூர் அரசநிலையத்தான் ஏரி குறிஞ்சான்குளம் ஏரி, அயனாத்தூர், செந்துறை வட்டத்தில் தளவாய் பெரிய ஏரி, செந்துறை பெரிய ஏரி, வீரவாசி ஏரி, நீலாம்புரம் ஏரி, ஆண்டிமடம் வட்டத்தில் மதிகெட்டான் ஏரி, உடையார்பாளையம் வட்டத்தில் பொன்னாறு பிரதான வாய்க்கால், சித்தமல்லி நீர் தேக்கம் ஆகியவற்றின் வரத்து வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் சீரமைக்கப்பட உள்ளன மேலும் அரியலூர் வட்டத்தில் தேளுர், வேட்டக்குடி ஏரி ஆகியவற்றின் வரத்து வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகளை பொற்கால அடிப்படையில் விரைந்து முடிக்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது திட்டத்தை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பணிகளை விரைந்து தரமான முறையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்
Next Story

