சிவகாசியில் தேர்தல் விதிமீறல், பறக்கும் படையால் கைப்பற்றிய ரூ1.40 லட்சம் பறிமுதல்...
சிவகாசியில் தேர்தல் விதிமீறல், பறக்கும் படையால் கைப்பற்றிய ரூ1.40 லட்சம் பறிமுதல்...
சிவகாசியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ1.40 லட்சம் பறிமுதல்.... விருதுநகர் மாவட்டம், நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி சட்டமன்ற தொகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.பரிசு பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றால் அதனை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் சிவகாசியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணத்தை எவ்வித ஆவணங்களும் இன்றி கொண்டு வந்துள்ளார். இதனை சிவகாசி நில அளவை ஆய்வாளர் சரவணன் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து தாலுகா அலுவலத்தில் ஒப்படைத்தனர்.
Next Story