ரயில்வே பாலத்தின் கீழே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூ.1400 பறிமுதல்.
Karur King 24x7 |5 Dec 2024 12:41 PM GMT
ரயில்வே பாலத்தின் கீழே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூ.1400 பறிமுதல்.
ரயில்வே பாலத்தின் கீழே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது. ரூ.1400 பறிமுதல். கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் தில்லை கரசிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4 மணி அளவில் காந்திகிராமம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, காந்திகிராமம் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம், பழையூர் அருகே உள்ள நெரூர் வடபாகம் பகுதியைச் சேர்ந்த கௌதமன், நெரூர் வடபாகம் ஆதி திராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் மற்றும் கிருஷ்ணராயபுரம் தாலுகா, மாயனூர், காஜா காலனி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 1400-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோனிமலை காவல்துறையினர்.
Next Story