கடத்தப்பட்ட 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கடத்தப்பட்ட 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
X
பறிமுதல்
தஞ்சாவூர் அருகே 1,400 கிலோ ரேஷன் அரிசியை சரக்கு ஆட்டோவில் கடத்தி வந்தவர் போலீசார் துரத்தியதும் வாகனத்தை நடு வழியில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் அவரை போலீசார் தேடி வருகிறார். தஞ்சையை அடுத்த திருக்கானூர் பட்டி மற்றும் அற்புதபுரம் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி உத்தரவின் பேரில் துணை போலீஸ் இருந்து நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் அற்புதாபுரம் சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. போலீசார் அந்த சரக்கு ஆட்டோவை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் எடுத்துச் சென்றார் உடனே போலீசார் தங்களது வாகனத்தில் சரக்கு ஆட்டோவை துரத்தினர். ஆனால் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதில் 50 கிலோ எடை கொண்ட 28 மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதை எடுத்து சரக்கு ஆட்டோவையும் அதிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தஞ்சை குடிமை பொருள் வழங்கும் போலீசார் வழக்கு பதிவு செய்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வருகிறார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சுமோ அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story