அரியலூரில் 1400 ஆண்டுகள் பழமையான இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலையத்தில் சுவாமி அலங்கார பொருட்கள்,சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள்

X
அரியலூர் மே.1- 1400 ஆண்டுகள் பழமையான இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலையத்தில் சுவாமி அலங்கார பொருட்கள்,சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூரில் 1400 ஆண்டுகள் பழமையான இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அர்ச்சகர் முருகானந்தம் கோவிலை இன்று திறக்கும் போது 6 பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது சிவன் மேல் வைக்கப்படும் நாகாபரணம் , தொங்கு விளக்குகள் , பூஜை பொருட்களும், பிரியால், மீனாட்சி , சுந்தரேஸ்வரர் ஆகிய பித்தளை சிலைகளை காணவில்லை. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினரிடம் தெரிவித்த நிலையில் கீழப்பழுவூர் போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டன புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Next Story

