கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நாள்: 14.02.2026

X
Rishivandiyam King 24x7 |6 Feb 2026 10:23 AM ISTகள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நாள்: 14.02.2026 கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் உள்ள காலி இடங்களில் புதிதாக ஊர்க்காவல் படை ஆளினர் (Home Guards) தேர்வு செய்யப்படவுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நாள்: 14.02.2026 கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் உள்ள காலி இடங்களில் புதிதாக ஊர்க்காவல் படை ஆளினர் (Home Guards) தேர்வு செய்யப்படவுள்ளனர். அதற்காக Oxaliss School Auditorium வைத்து வரும் 14.02.2026 ஆம் தேதி சனிக்கிழமை காலை 08.00 மணி முதல் 13.00 மணி வரை தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட ஆவணங்களுடன் Oxaliss School Auditorium நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகுதிகள்: 1. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. 18 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 3. கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்குள் குடியிருக்க வேண்டும் தேர்வின்போது கொண்டு வரவேண்டிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்: 1.கல்விச்சான்றிதழ் (TC) 2.மதிப்பெண் பட்டியல் 3.குடும்ப அட்டை 4.வாக்காளர் அடையாள அட்டை 5.ஆதார் அடையாள அட்டை 6.சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் - 2 (இரண்டு) தேர்ச்சி செய்யப்படும் ஊர்க்காவல்படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி ஒரு மணி நேரம் மற்றும் 30 நிமிடம் (1.30 hrs) பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவர். குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு தகுதியுடைய பட்டதாரி இளைஞர்கள், தொண்டு உள்ளம் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட சான்றிதழ் பெற்றவர்கள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Next Story
