மாயனூர் அருகே சட்ட விரோத மது விற்பனை 141- மது பாட்டில்கள் ,பணம் பறிமுதல்.
மாயனூர் அருகே சட்ட விரோத மது விற்பனை 141- மது பாட்டில்கள் ,பணம் பறிமுதல். மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மே 27ஆம் தேதி காலை 6- மணி முதல்சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் , தமிழ்செல்வன் , சிவகுமார் , சடையன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவை குளம் பகுதியில் அர்ஜுன தெருவை சேர்ந்த சுந்தரம் என்பவர் அவரது வீட்டின் அருகாமையில் மது விற்பனை ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதே போல மங்கம்மா சாலை அருகே கிருஷ்ணன் என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இவர்கள் இருவரிடம் இருந்தும் 110 குவாட்டர் மது பாட்டில்கள், ரூபாய் 610 பறிமுதல் செய்தனர். இதே போல சித்தலவாய், மஞ்ச மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் மஞ்சள் மேடு பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, பிச்சம்பட்டி அர்ஜுன தெருவை சேர்ந்த கர்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மேலும் 31 குவாட்டர் மது பாட்டில்களையும் ரூபாய் 570 மற்றும் ஒரு டூவீலரையும் பறிமுதல் செய்தனர். மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் மாயனூர் காவல்துறையினர்.
Next Story





