பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா! – கருமத்தம்பட்டியில் 141 கிலோ போதைப் பொருள் பறிமுதல் !

அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பைகள் சோதனை செய்யும் போது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிப்பு.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள எலச்சிபாளையம் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பைகள் சோதனை செய்யும் போது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மாணவர்கள் அதைப் பற்றி "மிட்டாய்" என நினைத்ததாகவும், நண்பர்களுடன் பகிர்ந்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் விசாரணை மேற்கொண்டதில், குட்கா பொருட்கள் எலச்சிபாளையத்தில் உள்ள ஒரு லோகு மளிகைக் கடையில் இருந்து வந்தது தெரியவந்தது. அந்தக் கடையின் பின்புற பாழடைந்த கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 141 கிலோ குட்கா பொருட்கள் கருமத்தம்பட்டி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story