திருச்செங்கோடு வட்டூர் ஏரிக்கரை அருகே குவாலீஸ்காரில் கடத்தப்பட்ட 1450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது

X
Tiruchengode King 24x7 |8 Oct 2025 5:47 PM ISTதிருச்செங்கோடு அருகே உள்ள வட்டூர் ஏரிக்கரை அருகே குவாலிஸ் காரில் கடத்தப்பட்ட 1450 கிலோ ரேஷன் அரிசியை நாமக்கல் குடிமை பொருள் காவல் துறையினர் கைப்பற்றினர். ரேஷன் அரிசி மற்றும் கடத்த பயன்படுத்தப்பட்ட குவாலிஸ் கார் மற்றும் காரை ஓட்டி வந்த ரமேஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர்
திருச்செங்கோட்டை அடுத்த வட்டூர் ஏரிக்கரை பகுதியில் குவாலிஸ் கார் ஒன்றில்வெண்ணந்தூர்பகுதியில் இருந்துதிருச்செங்கோடு நோக்கி காரில் கடத்ப்பட்ட ரேஷன் அரிசிபறிமுதல் செய்யப்பட்டது.1450 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நாமக்கல் குடிமை பொருள் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்துதுணை ஆய்வாளர் கண்ணா காந்தி தலைமையில்வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீசார் வாகனத்தில் இருந்த 1450 கிலோ அரிசி மற்றும் குவாலிஸ் கார்ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த குமாரபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ரமேஷ் 42என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாள் நீதிமன்ற காவலில் நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story
