உதகை செயின்ட் மேரிஸ் ஹில் தூய உத்திரிய மாதா பஜனை சங்க சிற்றாலயத்தின் 146 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

உதகை செயின்ட் மேரிஸ் ஹில் தூய உத்திரிய மாதா பஜனை சங்க சிற்றாலயத்தின் 146 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
X
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
உதகை செயின்ட் மேரிஸ் ஹில் தூய உத்திரிய மாதா பஜனை சங்க சிற்றாலயத்தின் 146 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் இருந்து ஜூலை 6 ஆம் தேதி விழா கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு பங்கு குரு பெனடிக்ட் தலைமையில் கொடியேற்றப்பட்டு ஆண்டு விழா தொடங்கியது. விழாவையொட்டி ஒன்பது நாள் தொடா் சிறப்பு நவநாள் மறையுரை நிகழ்த்தப்பட்டது . தினமும் மாலை ஜெபமாலையுடன் மறையுரை நடந்தது . இந்த விழாவில் பங்கு குரு பெனடிக்ட், மறைமாவட்ட ஆன்மிக ஆலோசகா் ஞானதாஸ், ஆயா் செயலா் இம்மானுவேல் ஆண்டனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து ஆடம்பர தோ் பவனி நடைபெற்றது . விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள் மற்றும் தூய உத்திரிய மாதா பஜனை சங்க உறுப்பினா்கள் செய்திருந்தனா் .
Next Story