தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாள் விழா: பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அரசியல் கட்சியினர்.

X
அரியலூர், செப்.17- ஜெயங்கொண்டத்தில் தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் தந்தை பெரியாரின் 147 -வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திமுக நகர செயலாளரும், நகராட்சி துணைத் தலைவருமான வெ.கொ.கருணாநிதி தலைமையில் 4 ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகே அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் மற்றும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்ரமணியம், மாவட்ட துணை செயலாளர் மு.கணேசன், ஜெயங்கொண்டம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தனசேகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வசந்தபகலவன், திக.கட்சி காப்பாளர் சி.காமராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள், திக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையில் பெரியாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இலக்கியதாசன், நகர மன்ற தலைவர் சுமதிசிவகுமார், நிர்வாகிகள் சின்னராஜா, சிபி ராஜா, மாவட்ட ஒன்றிய நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தமிழ் மாநிலப் பகுதி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் செ.க.குமார் தலைமையில் பெரியாரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். த.வெ.க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

