பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு கருஞ்சட்டை பேரணி !

கல்வி நிதி வழங்கவும், இந்தி திணிப்பை கைவிடவும் வலியுறுத்தல்.
தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவையில் நேற்று கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சிவானந்தா காலனி யு.கே.சிவஞானம் நினைவுத்திடலில் தொடங்கிய இந்த பேரணி, 100 அடி சாலை வழியாக காந்திபுரம் பெரியார் சிலை முன்பு நிறைவு பெற்றது. மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் 200க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். பறை இசை, செண்டை மேலங்களுடன் நடைபெற்ற பேரணியில், பெரியாரை போற்றியும், பாஜக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக கல்வி நிதி வழங்க வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
Next Story