நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஜேடர்பாளையம் பகுதியில், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை, ரூபாய் 1.48 கோடி. மதிப்பீட்டில், பூமி பூஜை எம்பி ராஜேஷ்குமார் பங்கேற்பு..

X
Rasipuram King 24x7 |17 Nov 2025 8:39 PM ISTநாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஜேடர்பாளையம் பகுதியில், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை, ரூபாய் 1.48 கோடி. மதிப்பீட்டில், பூமி பூஜை எம்பி ராஜேஷ்குமார் பங்கேற்பு..
அதிமுக ஆட்சியில் நாமக்கல் மாவட்டத்தில் எந்தவித தொழிற்சாலையும் கொண்டு வராமல், இன்று திமுக ஆட்சியில் டைடல் பூங்கா கொண்டு வருவதை மட்டும் ஏன் எதிர்க்கின்றார்கள் என்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஜேடர்பாளையம் பகுதியில், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை, ரூபாய் 1.48 கோடி. மதிப்பீட்டில், மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்துதல் 2025-2026 திட்டத்தின் கீழ், ஜேடர்பாளையம், வெள்ளாளப்பட்டி சாலையை தரம் உயர்த்துதல், மற்றும், ரூபாய் 1.41 கோடி மதிப்பீட்டில் தொ. ஜேடர்பாளையம் மாரியம்மன் கோவில் முதல் பச்சுடையாம்பாளையம் பள்ளி வரை தரம் உயர்த்துதல் ஆகிய பணிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார், தொ. ஜேடர்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் (17.11.2025 மாலை) தொடங்கி வைத்தார். இப்பணிகளின் மொத்த மதிப்பு ரூபாய் 2.89 கோடி ஆகும். இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி பேசிய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் K R.N. இராஜேஷ்குமார், தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்களுக்கான, 70% உள்பட சாலை வசதிகள், அனைத்து நலத்திட்ட பணிகளும், நலத்திட்ட உதவிகளும் முழு வீச்சில் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றி வருகிறோம். கொரோனா காலத்தில் குடும்ப அட்டைக்கு, அதிமுக அரசு கொடுக்கத் தவறிய 4 ஆயிரம் ரூபாய் உதவி தொகை, திமுக ஆட்சி அமைந்ததும் வழங்கப்பட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் கொடுக்க முடியாது என்று கூறியதை முறியடித்து இன்று இலவச பேருந்து பயணம் மகளிர்க்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தால் போக்குவரத்து துறை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அத்துறைக்கு நிதி உதவிகளையும் தமிழ்நாடு முதல்வர் வழங்கி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் தகுதி உள்ள யாருக்கும் விடுபடாமல் 70% விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அரசு பள்ளியில் படிக்கும் படித்து முடித்த கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவிகளுக்கு மாதந்தோறும், புதுமைப்பெண் திட்டத்தில் ஆயிரம் ரூபாய், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பஞ்சாப் மாநில முதல்வரும் அவரது மாநிலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார். மகளிர்க்கு நகை கடன் தள்ளுபடி, ஏழை எளிய மாணவ மாணவிகள் அரசு பள்ளியில் படித்து மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விக்கு சேர்வதற்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியதோடு, கல்வி கட்டணம் ஆகியவற்றை அரசே வழங்குகிறது. இதன்மூலம் ஒரு லட்சம் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். ஜேடர்பாளையம் பகுதிக்கு மட்டும் கலைஞர் கனவில் 20 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மத்தியில் ஆளும் பாஜக அரசு, 100 நாள் வேலைச் திட்டத்தில் சரியாக நிதி வழங்குவதில்லை. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் அத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தக்கூடாது என திமுக பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விட்டது. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி அருகே டைடல் பூங்கா அமைக்கப்பட்டால் இப்பகுதியை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். இதனால் அரசு கல்லூரிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலமாக குமாரபாளையம் தொகுதியில் அமைச்சராக இருந்த பி. தங்கமணி ஒரு தொழிற்சாலையை கூட கொண்டு வரவில்லை. பலருக்கும் வேலைவாய்ப்பு தருகின்ற இந்த திட்டத்தை அதிமுகவினர் ஏன் எதிர்கின்றனர்? அதிமுக ஆட்சியில் குமாரபாளையம் தொகுதியில் சிறுநீரக திருட்டு நடந்ததை ஏன் தடுக்கவில்லை?, மக்களுக்கான குடிநீர், பட்டா போன்ற தேவைகளை செய்யவில்லை. ஆனால், அவற்றை இன்று திமுக அரசு முழுமையாக வழங்கி வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி சண்முகம் நீதிமன்றத்துக்கு சென்றபோது அவருக்கு 10 லட்ச ரூபாய் நீதிமன்றம் அபராதம் விதித்தது. தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போன்றவை அதிமுக ஆட்சியில் நடந்ததை தடுக்கவில்லை. யார் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். 2026-ல் மீண்டும் முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை, இந்த நாடும் இனமும் காப்பாற்ற பட வேண்டும் என்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார் பேசினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. இராமசுவாமி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story
