காங்கேயம் அருகே கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மீது வார்டு மெம்பர்கள் புகார் - 15 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி
Kangeyam King 24x7 |16 Aug 2024 2:25 PM GMT
காங்கேயம் அடுத்துள்ள மரவபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் குற்றசாட்டு - ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு. காவல்துறையினர் குவிப்பு. கிராம சபை கூட்டத்திற்கு வந்த அதிகாரி சமாதானத்தில் ஈடுபட்டு 15 நாட்களில் விசாரணை பின் நடவடிக்கை
காங்கேயம் சென்னிமலை சாலையில் உள்ளது மரவாபாளையம் . மரவாபாளையம் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்க போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட துவங்கினர் கீதமணி சிவகுமார் பெண் தலைவர். மேலும் இந்த ஊராட்சியில் போட்டியிட்ட திமுக,அதிமுக வார்டு உறுப்பினர்கள் தெரிவிக்கும் எந்த புகாரையும் சரி செய்வதில்லை எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. குடிநீர்,தெருவிளக்குகள்,சாலைவசதிகள் சரிசெய்வதில்லை எனவும் ஊர் பொதுமக்களும் கோரிக்கை முன்வைக்கின்றனர். மரவாபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் 1. திருமூர்த்தி (சுயேட்சை ),2.சுப்பிரமணி , 3. ரதி, 4. மஞ்சு சுப்பிரமணியம், 5.ரேணுகாதேவி, 6.செல்வி, 7.குஞ்சுமணி, 8.திலகவதி , 9.ருக்குமணி வெற்றி பெற்றனர்.இதில் துணைத்தலைவராக மஞ்சு சுப்பிரமணியம் தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2022ம் வருடம் பிப்ரவரியில் வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் நிறைவேற்றியாத பொய்யான தகவல்களை அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் தற்போது தனியார் நிறுவனத்திற்கு மற்றும் பொதுமக்களுக்கு வீட்டு வரி மற்றும் தொழில் வரி செலுத்தியத்திற்கு முழுத்தொகையும் பெற்றுக்கொண்டு ஊராட்சி மன்றத்தில் இருந்து ரசீது வழங்கிவிட்டு அதற்க்கு உண்டான தொகையை அரசுக்கு செலுத்தவில்லை என வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதாரத்துடன் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கிராம சபை கூட்டத்தை துணைத் தலைவர் உட்பட 8 வார்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக நேற்று அறிவித்திருந்தனர். மேலும் கூட்டத் தொடக்கத்தில் தலைவரை எதிர்த்து பதாகைகளை வைத்து உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். புகார் தெரிவித்ததன் அடிப்படையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை சரி பார்த்தார். பின்பு உறுப்பினர்கள் அனைவரும் உரிய பதில் கேட்டு விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் கிராம சபைக் கூட்டத்தில் அமளிதுமளி நிலவியது. இதனை அடுத்து கூட்டத்திற்கு காங்கேயம் போலிசார் சுமார் 20பேர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் பேச்சுவார்த்தையில் தலைவர் மீது தெரிவிக்கப்பட்ட புகாருக்கு 15 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என எழுத்துப்பூர்வமான ஆதாரம் அளிக்க வேண்டும் என உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்ததன் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலாதேவி கையெழுத்திட்டு உத்தரவை அளித்தார். பின்னர் உத்தரவை பெற்று கொண்ட துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story